அப்பன் வீட்டு சொத்தை விற்றா ரூ.5,000 கொடுத்தனர்: சீமான்

UPDATED : மார் 11, 2026 06:39 AM


11-மார்-2026 12:52

எந்த இலவசமும் மக்களுக்கு இல்லாவிட்டால் என்ன நிகழும்? 1. பயணக்கட்டணம் செலுத்தி பேருந்தில் செல்பவர்களால் போக்குவரத்து கழகம் இலாபத்தில் இயங்கும். அதனால் புதிய, வசதியான பேருந்துகளை வாங்க இயலும் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம், ஓய்வூதிய பயன்கள் கிடைக்கும். இலவச பேருந்தில் பயணிப்பவர்கள் குடும்பத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் இருப்பார்கள். 2. எல்லோரும் மின்கட்டணம் செலுத்தி பயன் அடைவார்கள் எனில் மின்கட்டணம் வெகுவாக குறையும், தடை இல்லா மின்சாரம் பெற முடியும், சிறந்த மின் உபகரணங்களை அரசால் வாங்க முடியும். 3. அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெறாவிட்டால், வாங்காதவர்களின் பொருட்களை யாரோ ஒருவர் வெளி மார்க்கெட்டில் விற்று கொழுப்பதை தவிர்க்க முடியும். 4. இலவச வேஷ்டி புடவை வாங்காவிட்டால் தரமற்ற பொருட்களை கொடுக்க முடியாது அதனால் அரசுக்கு செலவு மிஞ்சும். ஊழல் நடக்கவும் வாய்ப்பு இல்லாமல் போகும். 5. இலவச அன்பளிப்புகளை வாங்காவிட்டால் மன சாட்சி படி நல்லவர்களை தேர்தலில் நம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும். இலவசங்களே இல்லாவிட்டால் தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், உலக சிறந்த மருத்துவம், உயர் தர கல்வி கல்வி கூடங்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகள், தடையில்லா மின்சாரம் என்று எல்லாமே சாத்தியம். இலவசங்களை, அன்பளிப்புகளை, லஞ்சம் வேண்டாம் என அனைவரும் சொல்லுவோம்.

Welcome