ஊடலுக்கு பின் காதல் மலர சில வழிகள்...
கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது.
இதை தவிர்க்க தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும்.
தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது.
விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே சமமாக இருக்க வேண்டும்.
தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இருவரும் பேசிவைத்துக்கொண்டு வரவு - செலவை பராமரிக்க வேண்டும்.
ஊடலில் கூடல் என்பது இருவருக்குமே அன்பின் ஆழத்தைப் புரிய வைக்கும்.
கணவன் - மனைவி சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.