எலும்பை வலுவாக்கும்.. இதயம் காக்கும்... பிரண்டை!

வலி, வீக்கம், சுளுக்கு, பிடிப்பு என உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக இருப்பது பிரண்டைக்கொடி.

சிவப்பு பிரண்டை, உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பிரண்டை பல வகைப்படும்.

பிரண்டை அரிக்கும் தன்மை உள்ளதால் அதனை சுத்தம் செய்யும்போது, கையில் சிறிதளவு நல்லெண்ணையை தடவி கொள்ளவும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும்.

வாரம் இரு முறை பிரண்டைத் துவையலைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், மூல நோய் போன்றவை குணமாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.