காற்றில் கலந்த கீதமே...
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பால் நேற்று (25ம் தேதி) இலங்கையில் காலமானார்.
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி.
இவர் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார்.
தனித்துவம் மிக்க குரல் இனிமையில் பல வெற்றி பாடல்களை பாடியிருக்கிறார் பவதாரிணி.
பிரபுதேவா, ரோஜா நடித்த ‛ராசய்யா' திரைப்படத்தில் தனது தந்தை இளையராஜாவின் இசையில் ‛மஸ்தானா மஸ்தானா...' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 2001ல் பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய ‛மயில் போல பொண்ணு ஒன்னு...' என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது.
2002ல் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் - மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பவதாரிணியின் திடீர் மறைவு இளையராஜா குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.