சர்வதேச வரிக்குதிரை தினம்: வரிக்குதிரை குறித்த சுவாரஸ்சிய தகவல்கள்..
குதிரை இனத்தை சேர்ந்தவை வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாலுாட்டி வகையை சேர்ந்தது. இவை கூட்டமாக வாழும். மூன்று வகைகள் உள்ளன.
நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும்.
இதன் உயரம் 3 - 7 அடி. நீளம் 7 - 10 அடி.
மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும்.
எடை 250 - 500 கிலோ. ஆயுட்காலம் 20 - 30 ஆண்டுகள்.
ஒரு வரிக்குதிரையின் வரி, மற்ற வரிக்குதிரையிடம் இருந்து வேறுபட்டது.