சிம்பிள் வழிகள் மூலம் சமையல் எரிவாயுவை மிச்சம் பிடிக்கலாம்!
சமையலைத் துவங்குவதற்கு முன்பு தேவையான பொருட்கள் மற்றும் வெட்டப்பட்ட காய்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் விரைவாக சமைக்க முடியும்.
அடுப்பில் பாத்திரத்தை வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும்.
நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து சமைக்காமல், குளிர் போன பிறகு சமைக்கலாம்.
சமையல் பாத்திரம் சூடான பிறகு முடிந்தவரை பர்னரை சிம்மில் வைக்கவும்.
சமைக்கும்போது பாத்திரத்தை முடிவைத்து சமைப்பதால் விரைவில் வேலை நடக்கும், கேஸும் மிச்சமாகும்.
சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் ஸுவிட்சை ஆப் செய்து விடுவதை கவனமாகச் செய்யவும்.