நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தர்பூசணியை சாப்பிடலாமா?
கோடை காலத்தின் கொடையான தர்பூசணி பழ சீசன் வந்தாச்சு. சுட்டெரிக்கும் வெப்பத்தை குளிர செய்யும் தர்பூசணியை சுவைப்பது குளுகுளுவென நம்மை மாற்றும்.
தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், போலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.
தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும்.
நீரிழிவு நோயாளிகள் 150 கிராம் தர்பூசணி வரை சாப்பிடலாம். அதாவது 1 கப் தர்பூசணிக்கு சமமாகும்.
இதை ஸ்நாக்ஸ் போல் குறைவாக உண்ணலாம். ஒரு வேளை உணவும் போல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
குறிப்பாக தர்பூசணியை காலை சிற்றுண்டியாகவோ, மாலை நேரத்திலோ சாப்பிடலாம். சாலட் போல செய்தும் உண்ணலாம். இரவில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதுவும் கண்டிப்பாக உணவுக்கு முன் அல்லது பின் உடனடியாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.