வைட்டமின் டி சத்து பெற என்னென்ன சாப்பிடலாம்?
தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கும்போது, உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை கிடைக்கிறது.
ஆரஞ்சுப் பழத்தை ஜூஸாகக் குடிக்கும் போது அதிலுள்ள வைட்டமின் டி, சி சத்துக்கள் அப்படியே முழுதாக உடலுக்கு கிடைக்கக்கூடும். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
காளானில் வைட்டமின் டி, நார்ச்சத்து, தாமிரம் பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், அடிக்கடி இதை சமைத்து சாப்பிடலாம்.
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பிராய்லர் கோழி முட்டைகளை விட, நாட்டுக் கோழி முட்டைகளில் தான் இச்சத்துகள் அதிகளவில் உள்ளன.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் சாளை உள்ளிட்ட மீன்களில் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது.
வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது ஓட்ஸ். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும், கீரைகள், சோயாபீன்ஸ், வெள்ளை பீன்ஸ் போன்ற காய்கறிகளிலும் வைட்டமின் டி சத்து அதிகளவு உள்ளது.