பிரபல பின்னணி பாடகர் பம்பா (49) பாக்யா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் பம்பா பாக்யா.
ராவணன் படத்தில் தொடங்கியது அவரது திரைப்பயணம்
சர்கார் படத்தில் இடம் பெற்ற சிம்டாங்காரன் பாடல் அவரை இன்னும் பிரபலமாக்கியது.
தொடர்ந்து 2.0 படத்தில் இடம் பெற்ற புள்ளனங்காள் பாடலையும் இவர் தான் பாடியிருந்தார்.
பிகில் படத்தில் வரும் காலமே காலமே போன்ற பாடல்களையும் பாடி உள்ளார்.
இம்மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாடலின் ஆரம்பவரிகளையும் இவர் தான் பாடி உள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான 'ராட்டி' ஆல்பம் பாடல் இளைஞர்களை கவர்ந்தது.
மறைந்த பம்பா பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.