மஞ்சளில்... மங்களூரியன் பூஜா ஹெக்டே
'முகமூடி' படத்தில் அறிமுகமானாலும், விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பூஜா ஹெக்டே.
தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள பூஜா, தற்போது 'தேவா' என்ற ஹிந்திப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது அழகான, கிளாமரான புகைப்படங்களை ரசிகர்களுக்காக பதிவிடுவார் பூஜா.
அதன்படி, நேற்று மஞ்சள் நிறப் புடவையில் மங்களகரமாய் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, 'த மங்களூரியன்' எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது உறவினரது திருமணத்தில் கலந்து கொள்ள அவர் மங்களூர் வந்த போது எடுத்துள்ள புகைப்படங்கள் அவை.
பூஜாவின் பெற்றோர் மங்களூருக்கு அருகிலுள்ள உடுப்பியைச் சேர்ந்தவர்கள்.
உடுப்பியைச் சேர்ந்தவர்களும் அவர்களை மங்களூர்க்காரர்கள் என்று சொல்லி அடையாளப்படுத்திக் கொள்வது வாடிக்கையானதாகும்.
பூஜா ஹெக்டேவின் இந்த அழகிய, மங்களகரமான புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.