கட்டாயம் பார்க்க வேண்டிய ஏழு மலைகள்!

எவரெஸ்ட் சிகரம்... நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இமயமலையில் 29,029 அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பது சாகச பிரியர்களின் தீரா கனவாகும்.

சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையே 14, 692 அடி உயரத்தில் அமைந்துள்ள மேட்டர்ஹார்ன் உலகின் பிரபலமான மலைகளில் ஒன்றாகும்.

12,389 அடி உயரத்தில் ஜப்பானின் சின்னமாக கருதப்படும் புஜி மலை அந்நாட்டு மக்களின் இதயங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

அமெரிக்காவில் 20,310 அடி உயரத்தில் அமைந்துள்ள தெனாலி மலை, டிரெக்கிங் செய்வபர்களுக்கு சவாலாக உள்ளது. முன்னர் மவுண்ட் மெக்கின்லி என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிமஞ்சாரோ... 19,341 அடி உயரத்தில் ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம், அதிர்ச்சியூட்டும் நிலப்பரப்புகளுக்கு இடையே சாகச பிரியர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை அளிக்கிறது.

தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் 7000 கி.மீ.க்கு மேல் நீண்டுள்ளது, ஆண்டிஸ் மலை; உலகின் மிக நீளமான கண்ட மலைத்தொடரை உருவாக்குகிறது.

பசிபிக் வடமேற்கின் சின்னமான மவுண்ட் ரெய்னர், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வானத்தில் கம்பீரமாகத் நிற்கிறது.