நகர்ந்து கொண்டே இரு... ஷில்பா ஷெட்டியின் இளமையின் ரகசியம் இது!

இளம் நடிகைகளுக்கு 'டஃப்' கொடுக்கும் வகையில் இன்னமும் அழகு மட்டுமின்றி, ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

வயது கூடிக்கொண்டே சென்றாலும் இளமை மாறாமலும் இன்னமும் உற்சாகத்துடனேயே வலம் வருகிறார் இந்த 90'ஸ் நாயகி.

தமிழில் பிரபுதேவா படத்தில் கதாநாயகி, விஜய் படத்தில் ஒரு பாடல் என கணிசமாக நடித்திருந்தாலும் பலருக்கும் பரிட்சயமான முகம் இவர்.

இவருக்கு 47 வயதாகிறது என்றால் நம்பத் தயங்குமளவுக்கு, இன்னமும் இளமை தோற்றத்துடன் காட்சி தருகிறார்.

உணவு முறைகளும், யோகா மற்றும் உடற்பயிற்சியுமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. எவ்வளவு 'பிசி'யாக இருந்தாலும், உடற்பயிற்சி, யோகாவுக்கு கணிசமான நேரம் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் ஷில்பாவுக்கு காலில் அடிபட்ட நிலையிலும் ஒரு சில வாரங்கள் ஓய்வாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. சற்று தேறியவுடன், எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை மேற்கொண்டார் இவர்.

எளிய வகை உடற்பயிற்சிகளை செய்யும் ஷில்பா, அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'நகர்ந்து கொண்டேயிரு. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை'. அதுதான் நான் கடைப்பிடித்து வரும் கொள்கை, குறிப்பாக, கடந்த இரு வாரங்களாக, நான் நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறேன்.

முழுமையாக குணமடைய நேரம் தேவைப்படும் போது, ​​நான் வழக்கமான முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். காயம் உள்ளதால் உடற்பயிற்சி நிபுணரின் மேற்பார்வையில் அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.