இன்டர்மிட்டண்ட் டயட்டில் இதெல்லாம் முக்கியம்...
அதிக உடல் பருமனை குறைக்க விரும்பினால் இன்டர்மிட்டண்ட் பாஸ்டிங் செய்வது சரியானதாக இருக்கும் என டயட்டீஷியன்ஸ் தெரிவிக்கின்றனர்.
ஒரே நாளில் உண்ணாவிரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றுவது இன்டர்மிட்டண்ட் டயட் முறையாகும்.
உதாரணமாக 16 மணிநேரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால் 16 மணி நேர விரதமும் 8 மணி நேரம் உணவு நேரமாகவும் இருக்க வேண்டும்.
புதிதாக டயட்டுக்குள் வர நினைப்பவர்கள் முதல் வாரத்தில் 12 -12 மணி நேரத்தில் தொடங்கி அப்படியே படிப்படியாக அதை 16-8 மணி டயட் முறைக்கு நுழைய முயற்சி செய்யலாம்.
மேலும் 8 மணி நேரத்துக்குள் சரியான இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டமிட்டு பின்பற்றுவது இன்டர்மிட்டண்ட் டயட்டில் மிக முக்கியம்.
உணவு இல்லாமல் பல மணிநேரங்களுக்கு உண்ணாமல் இருந்தால் உடல் அதன் சர்க்கரை தேவைக்கு கொழுப்பை எரிக்க தொடங்கும்.
வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழையும்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
இந்த டயட்டில் உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிடித்த உணவுகளை சாப்பிடலாம்.
அதற்காக நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் கலோரிகள் அதிகமாகும். நினைத்த பலன் கிடைக்காது.
மயக்கம், உடல் சோர்வு, அதிகப்படியான பசி ஆகியன இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு டயட் முறையில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
டயட் சமயத்தில் தினமும் உடற்பயிற்சி செய்தல், ஜங்க் உணவுகள், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.