முதுமையில் நினைவாற்றலை அதிகரிக்க சில வழிமுறைகள்...
அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது சிறப்பு மருத்துவரிடம் சென்று நினைவாற்றலை பற்றி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கான நண்பர்களை உருவாக்கி கொள்ளலாம்.
சொற்பொழிவுகள் கேட்பது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது நல சங்கங்களில் உறுப்பினராகி அதன் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
இசை கேட்பது மட்டுமல்லாமல் பாடுவது, நடனமாடுதல், கை தட்டுதல் போன்ற செய்கைகள் மனநலத்திற்கு நல்லது.
வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடி மனதை சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
அன்றாடம் நாம் செய்யும் வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.
சுமார் 6 - 8 மணி நேரம் துாக்கம் மிகவும் அவசியம்.
அதிக கோபம், மனக்கசப்பு, பொறமை மற்றும் மனப்பதற்றம் போன்ற எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம்.
முதியவர்கள் நடைபயிற்சி செல்லும் போது, மூளை பலமடையும். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டே நடைப்பயிற்சி செய்யலாம்.
தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது தியான பயிற்சி செய்ய வேண்டும்.