5 மணி நேர பயணத்தில் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய வெளிநாடுகள் சில!

பூட்டான் விமான கால அளவு (தோராயமாக) 2 மணி 20 நிமிடங்கள். பனி மூடிய அழகிய மலைகள், மடாலயங்கள் என மகிழ்ச்சியான நாடான பூட்டான், இந்தியாவிலிருந்து 2.30 மணி நேர தூரத்தில் உள்ளது.

இந்தியாவில் இருந்து பட்ஜெட் சர்வதேச பயணங்கள் என வரும் போது, தாய்லாந்தைத் தவறவிட முடியாது. விமான கால அளவு 4.30 மணி நேரம்.

ஸ்ரீலங்கா விமான கால அளவு (தோராயமாக) 2 மணி 30 நிமிடங்கள். இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று, இந்த தீவு தேசத்தில் ஏராளமான பசுமை மற்றும் அழகிய கடற்கரைகள் உள்ளன.

நேபாளம் இந்தியாவிலிருந்து எளிதாகவும் விரைவாகவும் செல்லக்கூடிய மற்றொரு இடமாகும். இது மலையேற்றம் மற்றும் பாரம்பரிய இடங்களுக்கு பெயர் பெற்ற நாடு. சராசரி விமான காலம் - 2.30 மணி நேரம்.

அழகிய கடற்கரைகள், பாரம்பரிய தளங்கள் என பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது மலேசியா. விமானத்தில் இங்கு செல்ல சராசரியாக 5. 30 மணி நேரம்.

சிங்கப்பூர் இந்தியர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். இளைஞர்கள், வயதானவர்கள் என பலரையும் வெகுவாக ஈர்க்கிறது. சராசரி விமான நேரம் - 5. 30 மணி நேரம்.

ஹாங்காங் இந்தியர்கள் பயணிக்க விரும்பும் மற்றொரு பிரபலமான இடமாகும். உயர்ந்த கட்டிடங்கள், இரவுச்சந்தைகள் என பார்வையாளர்களை ஈர்க்கிறது. சராசரி விமான நேரம் - 5 மணி நேரம்.

விடுமுறைக்கு பலரும் செல்ல விரும்பும் இடங்களில் ஒன்றாக துபாய் உள்ளது. இந்தியாவிலிருந்து சராசரியாக விமான நேரம் 3 மணி நேரம்.