கவலைகளை மறந்து மக்களை சிரிக்க வைத்த ‛மகா கலைஞன் வடிவேலு:மதுரை மாவட்டத்தில் 1960ம் ஆண்டு செப்.,12ம் தேதி பிறந்த வடிவேலுக்கு இன்று 62வது பிறந்தநாள்.
சிறிய வயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் நன்றாகவே நடிகர் வடிவேலுவிற்கு இருந்தது.
நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம் கிடைத்து அவருடைய அலுவலகத்தில் அவருக்கு உதவியாக ஆரம்ப காலங்களில் பணியாற்றினார்.
1991ல் 'என் ராசாவின் மனசிலே' படத்தில்தான் முதன் முதலாக வடிவேலு அறிமுகம் ஆனார். அதில் ஒரு பாடலையும் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.
2000ல்'வெற்றி கொடி கட்டு' திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனோடு இணைந்து இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இவரை ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் இட்டு அமர வைத்தது
உடல் மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு மற்றும் உடை என்று படத்திற்கு படம் பல வித்தியாசங்களை செய்து தமிழ் ரசிகர்களை தனது நகைச்சுவை நடிப்பால் வெகுவாக கவர்ந்தார்
"பாரதி கண்ணம்மா', 'பாட்டாளி', 'ப்ரண்ட்ஸ்', 'வின்னர்', 'கிரி', 'தலைநகரம்', 'சந்திரமுகி' என இவருடைய நகைச்சுவை உச்சம் தொட்ட படங்களின் பட்டியல் இன்னும் நீளும்.
"சூனா பானா', 'நாய் சேகர்', 'ஸ்நேக் பாபு', 'பாடி சோடா', "அலாட் ஆறுமுகம்', ‛கைப்புள்ள' போன்ற பெயர்களை நினைத்துப பார்த்தாலே அவர் உருவமும் நம் கண்முன் தோன்றி நம்மை சிரிக்கவைக்கும்
2006ல் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' என்ற படத்தின் மூலமாக தனது கதாநாயக அவதாரத்தையும் எடுத்தார் வடிவேலு
இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்களின் கடவுளாகவே மாறிவிட்டார் வடிவேலு.
அடுத்தப்படியாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் மீண்டும் மக்களை சிரிக்க வைக்க வருகிறார் இந்த வைகை புயல்.