உலகின் நீலமான தண்ணீர் இடங்கள் சில !
வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடங்களில் பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள போரா போரா ஒன்றாகும். வெள்ளைக் கடற்கரை மணல், அழகிய மரங்கள் என வெகுவாக ஈர்க்கிறது.
சீஷெல்ஸில் அழகிய, தெளிவான நீர் மட்டுமின்றி பெரிய ஆமைகளை ரசிக்கலாம். இந்த தீவிலுள்ள ஒவ்வொரு கடற்கரையும் கனவுலோகத்துக்கு அழைத்துச் செல்லும்.
பனி மூடிய சிகரங்கள், சுற்றிலும் பச்சை பசேலென்ற மரங்கள், கரடு முரடான பாறைகள் படைசூழ அமைந்துள்ளது கனடாவில் உள்ள பெய்டோ ஏரி.
நீல கடல் நீரை விரும்பினால் கிரீஸில் உள்ள வண்ணமயமான ஜக்கிந்தோஸ் தீவு சிறந்த சாய்ஸாக உள்ளது. இங்குள்ள நவகியோ கடற்கரை தற்போது சோஷியல் மீடியாவில் டிரென்டிங்கில் உள்ளது.
லாகோஸ், போர்ச்சுகல்... நீல நிற தண்ணீரில் செங்குத்தாக விழும் பாறைகள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
எக்ஸுமா, பஹாமாஸ்... கரீபியனில் பஹாமாஸ் அழகான வெள்ளை கடற்கரைகள் மற்றும் தெளிவான நீல நீருக்காக பிரபலமானது. இதில், கிராண்ட் எக்ஸுமாவில் காட்டு பன்றிகளை நீந்துவதை ரசிக்கலாம்.