பங்குனி உத்திரம்... கோவில்களில் கோலாகலம் !

பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த திருத்தேரோட்டத்தில் அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சென்னை, வடபழனி ஆண்டவர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்; அதிகாலை முதல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

சபரிமலையில் பத்து நாட்கள் நடந்த பங்குனி உத்திர திருவிழா, பம்பையில் ஆராட்டுடன் நிறைவடைகிறது.

பழநி மலைக்கோவிலில் தீர்த்தக்காவடிகளுடன் குவிந்த பக்தர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர கோவிலில், நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.