தமிழ் பொண்ணு மாதிரி நான் இருக்கேனா? இவானா ரீசன்ட் க்ளிக்ஸ்
'சொல்லுங்க மாமா குட்டி...' என்ற டயலாக்கின் மூலம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர் இவானா.
லவ்டுடே படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயமாகிய இவானா, இளசுகளின் கிரஷாக உள்ளார்.
சோஷியல் மீடியாவில் அவ்வப்போது இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன.
சமீபத்தில் பச்சை மற்றும் பிங்க் நிற பாரம்பரிய பாவாடை, தாவணியில் கலர் புல்லான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், 'நான் உங்க தமிழ் பொண்ணாக இருக்க முயற்சிக்கிறேன். எப்படி என சொல்லுங்கள்' என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, 'உயிர் உங்களுடையது தேவி',' தேவதை', 'தாவணி போட்ட தீபாவளி வந்திருச்சு என் வீட்டுக்கு' என பலவிதமாக கமென்ட்களை அளித்துள்ளனர் ரசிகர்கள்.
தொடர்ந்து, இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து, வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.