கண்களை தானம் செய்த நடிகர் டேனியல் பாலாஜி !
தென்னிந்திய திரையுலகில், வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தியவர், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி.
தொலைக்காட்சியில் வெளியான சித்தி தொடரில் நடிகராக அறிமுகமான இவர், பல்வேறு திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார்.
காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக டேனியல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இவர், மறைந்த பிரபல நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். டேனியல் பாலாஜி ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரின் கண்கள் தானம் அளிக்கப்பட்டன.