இன்று முட்டாள்கள் தினம் - சுவாரசிய வரலாறு அறிவோமா!

ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1-ம் தேதிதான் வசந்தம் ஆரம்பிக்கும் நாளாகும். அதனால் அன்று ஐரோப்பாவில் முன்னர் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி VIII ஆண்டுத் தொடக்க நாளாக ஜனவரி 1-ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.

போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

அப்படிப்பட்டவர்களை முட்டாள்களாகக் கருதி கேலி செய்தனர். ஏப்ரல் முட்டாள்கள் தினம் இப்படித்தான் தொடங்கியது. ஆனால் இதற்கு சான்றுகள் ஏதுமில்லை.

இத்தகைய கேலிக்கூத்துகள் சுற்றிச் சுழன்று பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் 'ஏப்ரல் பூல்' விரிந்து பரவி இருக்கிறது.

மேலும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் 1 முட்டாள் தினம் என உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

தற்போது இந்தியாவில் கூட, மக்கள் இந்த நாளில் பிறரை ஏமாற்றவும் கேலி செய்தும் கொண்டாடுகின்றனர்.