தினமும் இரவு துாங்குவதற்கு முன்பு கால் பாதங்களில் எண்ணெய் தடவுவது பல நன்மைகளைத் தரும்.

நம் உடம்பின் நரம்புகள் அனைத்தும் முடிகிறது. கால் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் பாதங்களில் தடவும் எண்ணெய் உடனடியாக உறிஞ்சப்பட்டு, ரத்த நாளங்களில் விரைவாகப் பரவி, உடலுக்கு புத்துயிர் அளிக்கிறது.

உள்ளங்காலில் தடவப்படும் எண்ணெய் இருபது நிமிடங்களில் உடல் முழுமைக்கும் செல்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆழ்ந்த துாக்கத்திற்கும் உதவும்.

இரவு படுக்கச் செல்லும் முன், கால்களை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்து, லேசாக சூடுபடுத்திய எண்ணெயை பாதங்கள், உள்ளங்கால்கள், கால் விரல்கள், முட்டி பகுதிகளில் மிருதுவாகத் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் மசாஜ் செய்யும் போது வேக வேகமாக செய்யக்கூடாது. மென்மையாக சிறிய வட்டம் வரைவது போல் மெதுவாக, அதேநேரம் அழுத்தமாக தேய்க்க வேண்டும்.

விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளில் இருந்து பாதங்களைப் பாதுகாக்கிறது.

இது தவிர, கால்களின் அக்குபிரஷர் புள்ளிகள் முழுவதும் துாண்டப்பட்டு, உடல் மன அழுத்தங்களை தணிக்கவும், நரம்புகளைத் தளர்த்தவும் உதவுகிறது.

எண்ணெய் மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் சர்க்கரை கோளாறு, சொரியாசிஸ் பிரச்னை, கால் மரத்துப் போவது போன் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.