உகாதி தினத்தில் நாவுக்கு விருந்தோ விருந்து!

உகாதி பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இனிப்பை தாண்டி, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டும் நாவிற்கு ஒரு விருந்து படைக்கப்படுகிறது.

உகாதி அன்று வேப்ப இலைகள், மாம்பழம், புளி, உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் ஆகியவற்றின் கலவையான பேவு பெல்லா தயாரிக்கப்படுகிறது.

இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் கசப்பு என அறுசுவைகளை சேர்த்து உகாதி பச்சடி செய்யப்படுகிறது.

சிறப்பு உணவாக சித்ரான்னா படைக்கப்படுகிறது. இதை நிம்மகயா புளிஹோரா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பிரபலமான தென்னிந்திய உணவான நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான்.

பருப்பு, வெள்ளரி, தேங்காய், எலுமிச்சை சாறு, மூலிகைகள் மற்றும் தென்னிந்திய மசாலா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு கோசம்பரி சாலட் தயாரிக்கப்படுகிறது. இது கர்நாடகாவில் மிகவும் பிரபலம்.

குழந்தைகளை கவரும் இனிப்பு சுவைக்காக வெல்லம் மற்றும் தேங்காய்ப் பாலுடன், ஏலக்காய் சேர்த்து பாரம்பரிய முறையில் பருப்பு பாயாசமும் செய்யப்படும்.

மேலும் போபட்லு, ஹோலிகே அல்லது ஒப்பாட்டு என்றும் அழைக்கப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யப்படுகிறது. வேகவைத்து அரைத்த பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.