முக சுருக்கங்களை போக்கும் கொலாஜன்… அதிகரிக்க உணவுகள் லிஸ்ட் இதோ!

நம் சருமத்தின் தோற்றம் இளமையாக தெரிய கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரின் 25 வயதிற்குப் பிறகு, உடலின் இயற்கையான கொலாஜன் உற்பத்தி ஆண்டுதோறும் 1% குறைவதாக கூறப்படுகிறது.

கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோல் முதிர்ச்சி, சுருக்கங்கள், கோடுகள் என படி படியாக தோல் தொங்குதல் போன்றவற்றை உருவாக்கும்.

கொலாஜன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மூலம் சருமத்தில் அவற்றை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும்.

உடலின் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வைட்டமின் சி அவசியம். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுக்கலாம்.

மட்டன் எலும்பு சூப்பில் அதிக அளவில் கொலாஜன் உள்ளது. மேலும் அதில் அமினோ அமிலங்கள், குளுக்கோசமைன், காண்ட்ராய்டின், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

மீனின் எலும்புகள், தோல் மற்றும் செதில்களில் பெரும்பாலான கொலாஜன் உள்ளது. அதிலும் மத்தி மீன், கொலாஜன் மிகுந்த உணவாக கருதப்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் , ப்ளூபெர்ரிகள் போன்ற பெர்ரிகளில் கொலாஜன் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

குயினோவா என்பது முழுக்க முழுக்க புரதச்சத்து நிறைந்த தானியம். இது கொலாஜனின் ஆரம்ப முறிவு அல்லது இழப்பை தடுக்கிறது.

முட்டையின் வெள்ளைக்கருவில் கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான அமினோ ஆசிட்களில் புரோலினும் மற்றும் கிளைசினும் அதிக அளவில் உள்ளன. அடிக்கடி உண்பது நல்ல பலனை தரும்.

பூண்டில் உள்ள சல்ஃபர் உடலில் கொலாஜனை உருவாக்கவும், சுருக்கங்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.