வீட்டில் சமைத்து உண்பது குறைந்தது... கடைகளில் உண்பது 50% அதிகரிப்பு !
இந்தியாவில் கடந்த நிதியாண்டில், மாதாந்திர உணவு பட்ஜெட்டில், 50 %, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவகங்கள் மற்றும் உணவு வினியோக சேவைகளில் அதிக வருவாய் கொண்டவர்கள் செலவழித்துள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் இதற்கான செலவு என்பது, 41.2 சதவீதமாக இருந்தது.
இதேபோல், நடுத்தர வருவாய் கொண்ட மக்கள் இதற்கு செலவு செய்வதும், 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் வாங்குவதும், வெளியே உண்பதும் அதிகரித்துள்ள நிலையில், வீட்டில் சமைப்பது கணிசமாக குறைந்துள்ளது.
உணவு வினியோக சேவைகள் மற்றும் வணிக செயலிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, மாறும் உணவு விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு, முட்டை, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு செலவழிப்பது குறைந்துள்ளது.
இது, அதிக வருவாய் ஈட்டுபவர்கள், தங்கள் வீட்டில் சமைப்பதை தவிர்த்து வருவதையே காட்டுவதாகவும், அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.