சொந்த கார் வாங்குவதன் செலவை கணக்கிடுவது எப்படி?

சொந்த கார் வைத்திருப்பது நவீன வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறியுள்ளது. வாகன கடன் வசதியால் சொந்த கார் வாங்குவதும் எளிதாகி உள்ளது.

ஆனால், கடன் வசதியில் கார் வாங்கும் போது, அசல் மற்றும் அதற்கான வட்டியை மட்டும் கவனத்தில் கொண்டால் போதாது. தொடர்புடைய மற்ற முக்கிய அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.

முன்பணம்... மற்ற எந்த கடனும் போலவே கார் கடனிலும் வட்டி விகிதம் முக்கியம். கடன் பெறும் போது, முன்பணமாக ஒரு தொகையை செலுத்த வேண்டும்.

இதர கட்டணங்கள்... கடனுக்கான செயல்முறை கட்டணத்தையும், முன்கூட்டியே கடனை அடைக்கும் போது ஒரு சில வங்கிகள் அபராதம் வசூலிக்கும் எனபதால் இதையும் மனதில் கொள்ள வேண்டும்.

காப்பீடு கட்டணம்... சொந்த கார் வாங்கும் போது விரிவான காப்பீடு வசதி பெறுவது அவசியம். மறைமுக கட்டணங்களும் இருக்கக்கூடும் என்பதால், காருக்கான மொத்த செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பதிவு கட்டணம்... காரின் விலையை மட்டும் கணக்கில் கொண்டால் போதாது. காருக்கான வரி மற்றும் பதிவு கட்டணத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பராமரிப்பு செலவு... சொந்த காரை பயன்படுத்தும் போது முறையாக பராமரிப்பது அவசியம் என்பதால், பாரமரிப்புக்கும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும்.