பேசுவது மகிழ்ச்சியை உருவாக்கட்டும்… அதனால் மனம் மகிழப் பேசுங்கள்...

நமது உரையாடல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த வேண்டும்.

உள்ளம் உணர்ந்து கவனமாகப் பேசுவதன் வழியாக இதை எளிதாக சாதிக்க முடியும்.

நாம் பேசும் வார்த்தைகள் நமது குணத்தை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் நம் ஆசையை சொல்லும். விருப்பங்களைக் கோடிட்டுக் காண்பிக்கும். தகுதியைப் பிரதிபலிக்கும்.

ஆகப் பேச்சு என்பது சுபாவத்தின் வெளிப்பாடு. தொடர்ந்து கவனமாகப் பயிற்சி செய்வதன் மூலமாக உறவுகள் மேம்படுத்தும் வகையில் பேச முடியும்.

ஒருவர் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தால் பேச்சும் தரமானதாக இருக்கும். தேவையில்லாமல் பேசிவிட்டோமே எனப் பின்னர் வருந்த நேரிடாது.

உணர்வு நிலை தவறிப் பேசும் மதியீனமான பேச்சுகள் இறுதியில் மனதிற்கு கடும் துயரத்தையே தரும்.

குறைவாகப் பேசுவது நல்லது. எப்போதும் உள்ளம் உணர்ந்து கவனமாக உண்மையுடன் பேசுவது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும்.