களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!
நாளை (ஏப்.,19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
44,801 ஓட்டுப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வரிசையில் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.
39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.