சம்மர் ஸ்பெஷல்... கோடையை குளிர்விக்க இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!
பதநீரும், நுங்கும்... பதநீரில் நுங்கைத் தோலுடன் கசக்கிப் போட்டு குடித்தால், பித்தமும், சூடும் தணியும்; மலச்சிக்கல் சரியாகும். இதில் இரும்பு, சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் உடலுக்கு வலிமையைத் தரும்.
மாங்காய் பானகம்... 'ஹீட் ஸ்டிரோக்' வராமல் தடுக்கும் இந்த பானகம். மாங்காய் துண்டுகள், இஞ்சி, உப்பு, வெல்லம் எல்லாவற்றையும் அரைத்து வடிகட்டி, சிறிது தண்ணீருடன் சேர்த்தால் ரெடி.
கீரை சர்பத்... வல்லாரை, அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை இவற்றில் ஒன்றை இஞ்சியுடன் சேர்த்து வேக வைத்து, வடிகட்டி, தேன் கலந்து சாப்பிட அத்தனை சத்துக்களும் கிடைக்கும்.
நன்னாரி சர்பத்... நன்னாரி வேரின் நடுவில் வெள்ளை பகுதியை நீக்கிவிட்டு, மற்ற வேர்ப்பகுதியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து காலையில் தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கலாம்.
பழைய சாத தண்ணீர்... இதில், நிறைய பி12 வைட்டமின் உள்ளது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணை போக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்; புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
செம்பருத்தி... ஒற்றை இதழ் சிகப்பு செம்பருத்திப்பூ, இஞ்சி, புதினா, லவங்கத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவிட்டு, தேன் அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இதய ஆரோக்கியம் மேம்படும்.