வெப்ப அலையில் இருந்து குழந்தைகளைக் காக்க என்ன செய்யலாம்…

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரோடு, கரூர், பரமத்தி வேலுார், திருப்பத்துார் மற்றும் சேலத்தில் அதிகப்பட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழக வட மாவட்டங்களில், வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கோடை விடுமுறையில் குழந்தைகள் இருப்பதால் சற்று அறுதல் என்றாலும், அவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுக்காப்பது மிகவும் அவசியம்.

3 - 12 வயதுள்ள குழந்தைகளை, குறிப்பாக காலை 11:00 - மாலை 4:00 மணி வரையில் வெளியில் விளையாட அனுமதிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இரவு, 6 - 9 மணி வரை விளையாட அனுமதிக்கலாம்

ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக, தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

பார்க் செய்யப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளை அதிக நேரம் விட்டு செல்லக் கூடாது.

எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் போது அதில் சர்க்கரை மட்டுமின்றி உப்பு சேர்த்து கொடுக்கலாம், புத்துணர்ச்சியாக இருக்கும்.

தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கையில் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.