தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவரது இல்லத்திலேயே நேற்று (மே 1) இரவு 9:30 மணியளவில் காலமானார்.

நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார்.

பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடி உள்ளார்.

சினிமா தவிர்த்து கணவர் ரமணன் உடன் இணைந்து ஆயிரணக்கணக்கான மேடை பாடல்கள் பாடி உள்ளார்.

நிறைய படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.

ஆனந்த ராகம்... - பன்னீர் புஷ்பங்கள், கண்ணும் கண்ணும் தான்... - திருப்பாச்சி, நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி, கண்மணி நீ வர காத்திருந்தேன் என அவரது பாடல்கள் என்றும் நம்மைவிட்டு நீங்காமல் இருக்கும்.