விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின் அவரது உடல் தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவரின் நினைவிடத்தில் தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

அவரது நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு 'லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக, விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.