மிரட்டும் வெயிலில் இருந்து உங்களை காத்துக்கொள்ள...!

தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.

வெயிலில் செல்ல நேர்ந்தால், குடை, தொப்பி பயன்படுத்தலாம்.

சோற்றுக்கற்றாழை ஜெல் கொண்டு உடலை தேய்த்து கழுவலாம்.

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் பாலேடு தடவலாம். பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

வெயிலை சமாளிக்க இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், கூழ் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

சுரைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், மோர், காய்கறி சூப், பழச்சாறு, பதநீர் மற்றும் நுங்கு போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.