இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன.
இவற்றில், பத்ம விபூஷண் ஐந்து பேருக்கும், பத்ம பூஷண் 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டன.
இவற்றில் 30 பேர் பெண்கள். எட்டு பேர் வெளிநாட்டினர். ஒன்பது பேருக்கு மறைவுக்கு பிறகான விருது அறிவிக்கப்பட்டன.
மறைந்த நடிகர் விஜயகாந்த், லடாக்கின் ஆன்மிக தலைவரான மறைந்த டாக்டர் ரின்போசே, தமிழக முன்னாள் கவர்னர் மறைந்த பாத்திமா பீவி ஆகியோருக்கு மறைவுக்கு பிறகான பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
விஜயகாந்துக்கான விருதை, அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலிக்கு பத்ம விபூஷண் விருது
தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
'பாம்பே சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர் ஹோர்முஸ்ஜி என் காமா, குஜராத்தின், 'ஜென்மபூமி' நாளிதழின் குழும ஆசிரியர் குந்தன் வியாஸ் உள்ளிடோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.