ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தமிழ்த் திரைப்படத்துறையில் இசை உலகில் பிரபலமான தம்பதிகள் ஆவர்.

11 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது. நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள்.

எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். - ஜி.வி.பிரகாஷ்

நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். - ஜி.வி.பிரகாஷ்

அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.

பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் 2013ல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

2020-ம் ஆண்டு இவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது.