மே 17 : உலக தொலைத்தொடர்பு தினம்…

1969 மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் மார்ச் 2006ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) மூலம் மே 17 ஆம் தேதி உலக தகவல் சமூக தினமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன் முக்கிய குறிக்கோள் இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், நல்லவிதமாகவும் பயன்படுத்துவது தான்.

மேலும் டிஜிட்டல் கூட்டணியின் ('Partner2Connect') மூலம், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய இணைப்பிற்கு உறுதியளிக்குமாறு தனியார் மற்றும் பொதுத் துறைகளை வலியுறுத்துகிறது.

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் 2024யின் மையக்கருத்து "நிலையான வளர்ச்சிக்கான டிஜிட்டல் கண்டுபிடிப்பு" ஆகும்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் கேஜெட்கள் இல்லாத ஒரு நாளை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மக்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைக்க தொலைத்தொடர்பு தான் முக்கிய வழி.

இன்னூம் உலகின் பல பகுதிகள் இணைப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன. தற்போது ஏஐ உதவியுடன் திறமையான தொலைத்தொடர்பு வலையமைப்பு அமைத்து உலகத்தில் சமமான தகவல் சமூகத்தை கட்டமைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.