பாரம்பரிய அரிசி குள்ளக்கார் : டயட் அரிசி என்றே கூறலாம்!
குள்ளக்கார் அரிசி சிவப்பு அரிசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது வெறும் 80 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய காலப் பயிராகும்.
இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் துத்தநாகம், இரும்புச்சத்து இதில் நிறைந்து உள்ளது. நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்.
குள்ளக்கார் அரிசி வயிற்றில் இருக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் பண்புகள் உடையதும் கூட. மேலும் இந்த நெற்பயிர்கள் முளைத்ததில் இருந்து அறுவடை காலம் வரை பூச்சிக்கொல்லி அல்லது உரம் தெளிக்கப்படுவதில்லை.
உடலுக்கு அபரிமிதமான பலத்தை அளிக்கிறது. மேலும் உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும்.
உடல் எடை குறைக்க நினைப்போர் இதை எடுத்து கொள்ளலாம். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.
மூளை சுறுசுறுப்பாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். நரம்புக்கு வலு சேர்க்கும்.
இந்த புழுங்கல் அரிசி இட்லி, தோசை மற்றும் கஞ்சி செய்ய சிறந்தது. குள்ளக்கார் அரிசியை குறைந்தபட்சம் 3 மணி நேரம் முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும்.