உடல் வலிமையை அதிகரிக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசி!
சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி1 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும், உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு.
இதில் உள்ள இரும்புச்சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் நிலையை அதிகரிக்க உதவுகிறது.
இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
இதை உண்பதால் வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்ந்து கஞ்சி செய்து உண்ணலாம்.
சாதத்தை விட இட்லி, தோசை மாவு அரைத்தும், மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம் .
கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக இருக்கும்.
உடலுக்கு தேவையான நார்ச்சத்து இந்த அரிசியில் இருப்பதால், குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் .