குட்டீஸ்களுக்கு பிடித்தமான தேங்காய் பால் பருப்பு பாயசம் ரெசிபி இதோ...!

தேவையான பொருட்கள்... பாசிப் பருப்பு, தேங்காய் பால் - தலா 2 கப், வெல்லம் - 2 கப் , முந்திரி - 15

கடலைப் பருப்பு, ஏலக்காய் துாள், நெய், தண்ணீர் - தேவையான அளவு.

பாசிப் பருப்பு, கடலைப் பருப்பை சுத்தம் செய்து, தண்ணீர் கலந்து வேக வைக்கவும்.

அதில், வெல்ல பாகு, தேங்காய் பால் கலந்து கொதிக்க விடவும்.

பின், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கவும்.

இப்போது, சுவையான தேங்காய் பால் பருப்பு பாயசம் ரெடி. குட்டீஸ்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.