பிரசவத்திற்குப் பின் உண்டாகும் தொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்!

தாய்ப்பால் தருவது குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி தாய்க்கு கொழுப்பை குறைக்கவும், கர்ப்பத்துக்கு பிறகு வயிற்று தொப்பையை குறைக்கவும் உதவுகிறது. இது கருப்பை சுருங்குவதை உறுதிப்படுத்துகிறது.

பொதுவாக உடற்பயிற்சியில் மிகவும் எளிமையானது நடைபயிற்சி தான். எனவே, சுகப்பிரசவமாக இருந்தால் 15 நாட்களில் வீட்டிலேயே நடைப்பயிற்சி பழகலாம். இது உடல் எடை குறைப்பை உறுதி செய்யும்.

பிரசவத்துக்கு பின் ஆரோக்கியமான உணவை எடுக்க வேண்டும். உடலிலுள்ள நச்சை வெளியேற்ற புரதம், மசாலா, க்ரீன் டீ போன்றவற்றை உட்கொள்ளலாம். நச்சு நீங்கினால் உடல் எடை பழைய நிலைக்கு திரும்பும்.

பிரசவம் முடிந்தவுடன் வயிற்று தொப்பையை குறைக்க டாக்டரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் உரிய உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

யோகா பயிற்சியில் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விடும் போது குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானம் மேம்படுகிறது. இதன் மூலம் உங்கள் மனச்சோர்வு நீங்கும்; ஆற்றலுடன் இயங்குவீர்கள்.

பிரசவத்துக்கு பிறகு தாய்க்கு போதிய ஓய்வு தேவை. இல்லாவிட்டால், உடலில் நச்சுத்தன்மை உண்டாகி, உடல் பருமனை அதிகரிக்கக்கூடும். எனவே, குழந்தை தூங்கும் போது தாயும் ஓய்வு எடுக்க வேண்டும்.

மன உற்சாகம் எடை இழப்புக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, வீண் மனச்சோர்வை தவிர்த்து புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, செடிகள் வளர்ப்பு என பிடித்தமான செயல்களில் கவனத்தை செலுத்தலாம்.

முன்னோர்கள் காலத்தில் வயிற்றில் துணி கட்டுவது போன்று, தற்போது மகப்பேறு பெல்ட்கள் கிடைக்கின்றன. எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி பெல்ட் அணிய முயற்சிக்கலாம்.