குழந்தைகள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாமா?
பார்வைத்திறன் குறைந்தவர்கள், பவருக்கு ஏற்றார்போல் கண்ணாடி அணிகின்றனர்.
கண்ணாடி அணிய விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்கின்றனர். இதில் சிறுவயதினரும் அடக்கம்.
அதேவேளையில், குழந்தைகளுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒத்து வருமா என்று பலரிடமும் பலத்த சந்தேகம் நிலவுகிறது.
குழந்தைகளை பொறுத்தவரை கண்ணாடியே சிறந்தது. கான்டாக்ட் லென்ஸை பாதுகாப்பாக கையாள தெரிந்தால் பயன்படுத்தலாம்.
கான்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குழந்தைகள் தங்களை அறியாமலேயே, கண்களை தேய்த்து விடுவர். இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.