கெட்ட கொழுப்பை குறைக்கும் ஊற வைத்த பாதாம்!

பாதாம் பருப்பு மிகவும் சத்தானது, சுவையானது. இரவு முழுக்க நீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும்.

நீரில் ஊற வைத்த பாதாமில், 'லிபேஸ்' என்ற நொதி வெளிப்படும். அதனால் இதை உண்டால் எளிதில் செரிக்கும். முழு நன்மை கிடைக்கும்.

ரத்தத்தில், 'ஆல்பா டேகோபெரோல்' என்ற பொருள் அதிகரிக்க செய்கிறது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை அளவும் கட்டுப்படும்.

பாதாமில் உள்ள கொழுப்பு எளிதில் வயிற்றை நிரப்பி விடும். இதனால், நொறுக்குத்தீனி தின்பது கட்டுப்படும்; உடல் எடை குறையும்.

கெட்ட கொழுப்பை குறைக்கும் குணம், ஊற வைத்த பாதாமுக்கு உண்டு. இதயத்துக்கு உகந்தது.

கர்ப்பிணிகளுக்கு, போலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்க செய்கிறது. இது குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது

ஊற வைத்த பாதாமில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்ட்களால், இளமை தோற்றம் கிடைக்கும்.

இதிலுள்ள சத்து புற்றுநோய் உருவாவதை எதிர்க்கும் தன்மை உடையது.