கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள் !

பாகற்காய்... வைட்டமின் சி, ஏ மற்றும் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளன. இதை உட்கொள்வதால் பசி அதிகரிக்கும். நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெண்டைக்காய்... போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும். எளிதில், ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. தொடர்ந்து உட்கொண்டால், மலச்சிக்கல் நீங்கும்.

புடலங்காய்... வைட்டமின் 'ஏ', 'பி', இரும்புச் சத்து, தாமிரம், கால்சியம் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன; எலும்பு உறுதிப்படும்.

பீட்ரூட்... இதில் துத்தநாகம், கால்சியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். பீட்ரூட் சாறு, தினமும் ஒரு கப் குடித்து வர, உடல் சுத்தமாவதுடன் கல்லீரல் பிரச்னைகளும் தீரும்.

பீன்ஸ்... புரதச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நார்சத்து உள்ளதால், மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கிறது.

வாழைத்தண்டு... கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி மற்றும் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது, சிறுநீர் கல் அடைப்பு இருந்தால், அதை கரைக்க உதவும்.