பள்ளிக்கு என்ன ஸ்நாக்ஸ் தரலாம்…லிஸ்ட் இதோ…

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் டைமுக்கு என்ன தரலாம் என்பது அம்மாக்களின் கவலைகளில் ஒன்று. ஒரே விதமானதாக அல்லாமல், தினமும் வெவ்வேற என்ன ஹெல்தி ஸ்நாக்ஸ் தரலாம் என்பதன் லிஸ்ட் இதோ.

பழங்களில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. திராட்சை, வாழைப்பழம், மாதுளை போன்ற வெட்ட அவசியம் இல்லாத பழங்களை தரலாம்.

பழங்களை போல் அதிக சத்துகள் நிறைந்த காய்கறிகளை கொடுக்கலாம். சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு தெளித்த முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்த்த வெஜிடபுள் சாலட் சிறந்த ஸ்நாக்ஸ் தேர்வு.

உலர்ந்த பழங்களில் உடலுக்கு தேவையான கொழுப்புகள், புரதங்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உலர்ந்த திராட்சை, ஆப்ரிகாட், பேரீச்சம்பழம் போன்றவற்றை ஒரு நாள் தரலாம்.

பாதாம், முந்திரி, வால்நட் என பல நட்ஸ் உள்ளன. சுவையுடன் அதிக ஊட்டச்சத்துகளும் நிறைந்தவை நட்ஸ் வகைகள். 30 கிராம் அளவு நட்ஸ் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்டல் புரதத்தின் முக்கிய மூலமாகும். நார்ச்சத்து, கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கல் இதில் காணப்படுகின்றன. கொண்டைக்கடலை, பாசிப்பயறு, காராமணி, மொச்சை, கடலைப் பருப்பு சுண்டல் சாப்பிட வேண்டும்.

பணியாரம், கொழுக்கட்டை, முறுக்கு போன்ற வீட்டில் தயாரிக்க பண்டங்களை ஒரு நாள் தரலாம்.

பாக்கெட்டுகளில் அடைத்து வரும் சிப்ஸ், மிக்சர், பிஸ்கட் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதில் கலப்படம், அதிக உப்பு, சர்க்கரை உள்ளன.