கை வைத்தியம் கொண்டு குமட்டலுக்கு குட்பை சொல்லுங்கள்…
ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட பயணத்தின் போதோ அல்லது அசவுகரிய உணர்வு ஏற்படும் போது வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவை ஏற்படும்.
அதிக அளவில் வாந்தியெடுத்தல் உடலில் உள்ள நீரை வெளியேற்றி, மயக்கத்தை உண்டாக்கும். எனவே வாந்தியைத் தடுத்து, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம்.
குமட்டலை போக்க இயற்கையான சில பொருட்களை வைத்து குணப்படுத்தலாம்.
பயணத்தின் போது ஏற்படும் குமட்டலில் இருந்து நிவாரணம் பெற பச்சை கிராம்புகளை மென்று சாப்பிடலாம். செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் கிராம்பு குமட்டலை நிறுத்தும் திறன் உள்ளதால் ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சீரகம், செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்க சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி பயணத்தின் போது குமட்டல் அறிகுறிகளை தடுத்து நிறுத்த உதவும்.
புதினா இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டல், வாந்தி, தலைசுற்றலை தடுக்க புதினா இலைகளை மென்று வரலாம்.