நல்ல தூக்கத்தை தரும் கிவி பழம்… நன்மைகள் அறிவோமா…
குழந்தைகள் அதிகம் விரும்பும் கிவி பழம் புளிப்பு இனிப்பு சுவை கலந்தது. இதில் வைட்டமின்கள் சி, கே, ஈ, போலேட், செம்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் ரத்தம் உறைதல் மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்தும்.
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் ஆஸ்துமா, மேல் சுவாசக்குழாய் திணறல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தும். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
இதை அதிகம் உண்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தவும் உதவும்.
மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து இரவு நல்ல தூக்கத்தை வழங்க கூடியது. மேலும் மன நலனையும் உறுதியாக்க உதவும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும்.
கிவியில் காணப்படும் போலேட்டின் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக இது கருவின் வளர்ச்சிக்கு உதவும்.
இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்பதால் குறிப்பிட்ட நோய்களை வராமல் தடுக்க இதை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.