உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க இதோ சில டிரிக்ஸ் !
டான்ஸ் ஆடுவது சிறந்த கார்டியோ உடற்பயிற்சி. இது உடலில் ரத்த ரத்த ஓட்டத்தையும், மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை உடனடியாக வெளியிடுகிறது.
உங்களுக்குப் பிடித்த உணவை உண்ணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மூளையில் டோபமைனை அதிகரிக்கிறது. பழ ஸ்மூத்திகள், நட்ஸ், டார்க் சாக்லேட்டுகள், காய்கறிகள், காபி மற்றும் பெர்ரி போன்றவை சிறந்த தேர்வாகும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க இசை உதவுகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த பாடல்களை அடிக்கடி கேட்கலாம்.
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மனதை அமைதிப்படுத்தும். பூங்கா, புல்வெளியில் நடப்பவர்கள், பறவைகளின் சத்தம் கேட்பவர்கள், சுத்தமான காற்று சுவாசிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உங்களின் பார்ட்னர் அல்லது நண்பர்கள் குறிப்பிட்டளவு நேரத்தை ஒதுக்கி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும்போது, மகிழ்ச்சியின் வெளிப்பாடை புரிந்து கொள்ளலாம்.
சிரிப்பு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது; இது நரம்பு செயல்பாட்டை எளிதாக்கவும் உதவுகிறது. எனவே, அவ்வப்போது நண்பர்களுடன் பேசியோ அல்லது நகைச்சுவை காட்சிகளை பார்த்தோ சிரிக்கவும்.
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் செரோடோனின் உற்பத்தியை அதிகரிப்பதால், அவ்வப்போது வெயிலில் 15 நிமிடங்கள் நிற்கலாம். இதனால், புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் தப்பிக்கலாம்.
தினமும் 2 முதல் 3 லி., தண்ணீர் குடிப்பது ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை மேம்படுத்தம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது .
மன அமைதிக்கும் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் தியானம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனவே, தினமும் குறைந்தபட்சமாக 15 நிமிடங்களுக்கு எளிய பயிற்சி மேற்கொண்டால், மனம் ரிலாக்ஸாக இருக்கக்கூடும்.
உடற்பயிற்சி உடலில் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை மேம்படுத்துகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.