அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
உயிர் மற்றும் உலகம்; நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.- விக்னேஷ் சிவன்
பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசீர்வாதமும் தேவை. - விக்னேஷ் சிவன்
வாடகைத்தாய் மூலம் இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.
ரசிகர்களும், திரையுலகினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.