பாரம்பரியமிக்க சோளம்.. சத்துகளோ அபாரம்!
வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 வகையான சோளம் இருக்கிறது.
இதில் இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் ஆகியன உள்ளன. வைட்டமின் பி மற்றும் போலேட் போன்றவை அதிகளவில் உள்ளது.
சோளத்தில் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்யும். நாட்பட்ட மூட்டு வலிக்கும் எலும்பு தேய்மானத்துக்கும் நல்லது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். அஜீரணத்தை போக்கும்.
சோளத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடுகள் நீங்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைக்கும். சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தும்.
நீரழிவு நோய் உள்ளவர்கள், கம்பு மாவுடன், சோளமாவையும் கலந்து களி போல செய்து உண்ணலாம்.
மேலும் சோளத்தில் இட்லி, தோசை, உப்புமா, ரொட்டி, கேக், லட்டு என விதவிதமான உணவு வகைகளும் செய்யலாம். சத்துமாவுக் கஞ்சி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.