இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான சித்ரகோட்... ஒரு விசிட் செய்யலாமே !
சத்தீஸ்கரில் பஸ்தார் மாவட்டத்தில் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் சித்ரகோட் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.
குறிப்பாக மழைக்காலத்தில் சித்ரகோட் நீர்வீழ்ச்சியை பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும். நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பசுமையாக சூழப்பட்டு, வானவில் மற்றும் மூடுபனியின் அழகை ரசிக்கலாம்.
ஜூலை முதல் அக்., வரை, பருவமழை இந்திராவதி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் போது 95 அடி உயரத்திலிருந்து, 300 மீ., (980 அடி) அகலத்தில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பரந்து விரிந்து கம்பீரமாக கொட்டுகிறது.
இயற்கையின் வியப்பான, பிரமிக்க வைக்கும் இந்த அழகை மழைக்காலத்தில் ரசிப்பதற்காகவே இங்கு பலரும் விசிட் செய்வது மறக்க முடியாத சாகச அனுபவமாகும்.
நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பகுதி பல்வேறு பழங்குடியினரின் தாயகமாகும். புனிதமாக கருதப்படும் நிலையில், உள்ளூர் புராணங்களும் நாட்டுப்புறக் கதைகளும் நீர்வீழ்ச்சியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.
சித்ரகோட் நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பகுதி பழங்கால கோயில்கள், தொல்பொருள் தளங்களால் நிறைந்துள்ளது. பழங்குடியின மக்களின் தெய்வமான தண்டேஸ்வரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் பிரபலமாகும்.